ஹாத்திம் தாய் - பாரசீகப் பெருங்கதை.

ஏழு விதச் சவால்களுக்கும் பதில் கண்டுபிடித்து வரக் கிளம்பிய ஹாத்திம் தாயின் வரலாறே இந்தப் பாரசீகப் பெருங்கதை. ஹஸன்பானு என்ற இளவரசி
ஏழு கேள்விகள் வைக்கிறாள். ஹாத்திம் தாய் என்ற கட்டழகான இளவரசர் அந்த ஏழு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து பானுவிடம் வந்து சொல்லும் பெருங்கதை.
ஒரு கேள்விக்கு விடை தேடிப் போகிறார். அங்கே ஒருவரைச் சந்திக்கிறார். அவனுக்கு ஒரு கஷ்டம். தயாள தாய் அவன் கஷ்டத்தை நீக்கப் பார்க்கிறார். அதற்கான முயற்சிகளில் இறங்கும் போது ஒரு பாம்பு வந்து, நான்கு கேள்விகளை அள்ளிப் போடுகின்றது. அதில் முதல் கேள்விக்கு விடை காண ஒரு காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஒரு கிழவி அழுகிறாள். அவள் பேரனை ஒரு பூதம் தின்னப் போகிறது. தாய் விட்டு விடுவாரா என்ன? பூதத்தை வெல்ல வழி தேடும் போது வேதாள உலகத்தில் விழுந்து விடுகிறார். அங்கே வேதாள இளவரசி இவர் அழகைக் கண்டு மயங்கி விட, தாய் இளவரசியோடு ஜல்ஸா செய்கிறார். வேதாள அரசனுக்கு கோபம். அதிலிருந்து தப்பிக்க, ஒரு குளிகையைச் சாப்பிட ஒரு கிணற்றுக்குள் மயங்கி எழுகிறார். ஒரு பிசாசு அவர் எதிரில் நிற்கிறது.

இப்படியே போய்க் கொண்டே இருக்கின்றது கதை.

பதிப்பாசிரியர் -சிரஞ்சீவி
பிற மொழி தொகுப்பு : சேரன்

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.