பூந்தளிர் காமிக்ஸ் - (1985 இல் வெளிவந்த இரண்டு காமிக்ஸ் வரிசை- 3 & 4)

கேரளாவில் பூம்பட்டா (Poompatta-வண்ணத்துப்பூச்சி) என்ற சிறுவர் இதழை வெற்றிகரமாக நடத்தி வந்த பைகோ (PAICO) நிறுவனம் சிறுவர் இதழ்களின்
பொற்காலமான 1984ம் வருடம் அக்டோபர் முதல் தேதியன்று 'குழந்தைகளுக்கான புதுமைப் பத்திரிக்கை' என்ற வாக்கியங்களுடன் பூந்தளிரை மாதம் இருமுறை இதழாகத் தொடங்கியது. அப்போது ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மஞ்சரி போன்ற சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதே காலக்கட்டத்தில் கேரளாவில் 9 சிறுவர் இதழ்கள் பூந்தளிரைப் போன்ற உள்ளடக்கத்துடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1984 ம் வருடத்தில் ராணிக்காமிக்ஸ், லயன் காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ் போன்றவையும் வெளிவரத் தொடங்கின.
ரூ. 2/- விலையில் 260, கோல்டன் டவர்ஸ், ராயப்பேட்டை ரோடு , சென்னை 14 என்ற முகவரியில் இருந்து வெளிவந்தது பூந்தளிர். பைகோ நிறுவனத்தின் தினேஷ் வி.பை பூந்தளிரின் (கௌரவ) ஆசிரியராக இருந்தார். துணை ஆசிரியராக 'வாண்டுமாமா' நியமிக்கப்பட்டார். சிறுவர் இலக்கியம் என்றால் பாடல்கள், விடுகதைகள்,சிறுகதைகள் என்ற நிலையை மாற்றி சித்திரங்களின் மூலம் கதை சொல்வதே குழந்தைகளை எளிதில் கவரும் என்பதை பூந்தளிரின் மூலம் நிரூபித்து காட்டினார் வாண்டுமாமா. பூந்தளிர் வெறும் கதைகளை மட்டும் வெளியிடும் பொழுதுபோக்கு இதழாக அல்லாமல் ஒரு அறிவூட்டும் இதழாக (Edutainment) வாண்டுமாமாவின் கைவண்ணத்தில் வெளிவந்தது.
வாண்டுமாமா அடிப்படையில் ஓர் ஓவியர், இதழ் வடிவமைப்பாளர், சிறுவர் இலக்கியங்களைப் படைப்பதில் சாதனை படைத்தவர், அயல்நாட்டு இலக்கியங்களைத் தமிழ் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், சிறுவர் இலக்கிய உலகில் புது புது உத்திகளை புகுத்துவதில் மன்னர். பைகோ நிறுவனம் மிகுந்த சுதந்திரத்தையும், பூந்தளிரை ஒரு முன்மாதிரி சிறுவர் இதழாகக் கொண்டுவர வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தது.

டவுன்லோட் லிங்க் :
1985 POONTHALIR COMICS -3

1985 POONTHALIR COMICS -4 

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.