ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .

புதுவகையான முயற்சிகளை வரவேற்பவர் சுஜாதா. ஆனால் ஹைக்கூ விசயத்தில் அவர் மிகவும் மனம் வெறுத்திருந்தார். “ஹைக்கூ ஒரு புதிய
அறிமுகம்” என்ற நூலிலின் முன்னுரையில் ” இதை படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இந்த புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது” என எழுதியிருந்தார். தினமலர் நாளிதலுடன் வெளிவரும் பெண்கள் மலரில் ஹைக்கூ என்று பெயரிட்டு உரைநடைக் கவிதைகள் வெளிவருவதை பார்த்திருக்கிறேன். அது பல இல்லத்தரசிகளின் கன்னி முயற்சி என்பதால், அதிக சாடல்களை பெறவில்லை.
அந்த புத்தகம் முழுவதும் இதுதான் ஹைக்கூ. இப்படிதான் எழுதவேண்டும். அதன் பாரம்பரியம் இது. அதன் வேறு வடிவங்கள் இவை என்று ஒரு தீர்க்கமான கட்டமைப்பினை உணர்த்தியிருந்தார். அவரை இந்தளவிற்கு பாதித்த ஹைக்கூ வாசகனால் எழுதப்பட்டதா இல்லை கவிஞனுடையதா என தெரியவில்லை. மூன்று வரிக்கு தக்கபடி மடித்து எழுதினால் ஹைக்கு கிடைத்துவிடும் என்றே நினைத்தவர்கள் பலர் இருக்க அதெல்லாம் பொய்யாக்கி   கவிதைக்கும் ஹைக்கூவுக்குமிடையேயான வேறுபாடுகளை தெளிவாக கூறிவிட்டார்.
காதல்
மனங்களை இணைக்கும்
மதங்களை பிணைக்கும்
ஒரே மந்திரச் சொல்!
சுஜாதாவின் புத்தகத்தினை படிக்கும் முன் இதைதான் ஹைக்கூ என நாமெல்லாம் நம்பி இருப்போம் படித்தபின்தான் அது கவிதையென புரிந்தது. சரி ஹைக்கூ எப்படியிருக்கும் தெரியுமா?.
கடும் வெயிலில் இன்னும் ஆடும் காலி ஊஞ்சல்!.
இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தினை படிக்கும் போது உணர்ந்திருப்பீகள். முதலில் இருப்பதை படித்தவுடன் எந்த சலனமும் இல்லாமல் மனம் அப்படியே கிடைக்கும். ஆனால் இரண்டாவதை படித்தவுடன் அந்த வெயிலில் ஆடும் ஊஞ்சல் உங்கள் மனக்கண்களுக்கு தெரியும். அது மட்டுமல்லாமல் இன்னும் இன்னும் கற்பனைகள் விரியும். இதுதான் ஹைக்கூ.
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
(அல்லது )
MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.