கேரளாவில் பூம்பட்டா (Poompatta-வண்ணத்துப்பூச்சி) என்ற சிறுவர் இதழை
வெற்றிகரமாக நடத்தி வந்த பைகோ (PAICO) நிறுவனம் சிறுவர் இதழ்களின்
பொற்காலமான 1984ம் வருடம் அக்டோபர் முதல் தேதியன்று 'குழந்தைகளுக்கான புதுமைப் பத்திரிக்கை' என்ற வாக்கியங்களுடன் பூந்தளிரை மாதம் இருமுறை இதழாகத் தொடங்கியது. அப்போது ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மஞ்சரி போன்ற சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதே காலக்கட்டத்தில் கேரளாவில் 9 சிறுவர் இதழ்கள் பூந்தளிரைப் போன்ற உள்ளடக்கத்துடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1984 ம் வருடத்தில் ராணிக்காமிக்ஸ், லயன் காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ் போன்றவையும் வெளிவரத் தொடங்கின. டவுன்லோட் லிங்க் : MEDIAFIRE -22 MB (அல்லது ) MEDIAFIRE -22 MB |
Labels: தமிழ் காமிக்ஸ்